Home நாடு ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு

ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு

617
0
SHARE
Ad

imageஜோகூர், நவ 23 – வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் ஜோகூர் மாநிலத்தில் வார விடுமுறை நாட்களாக வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் இருக்குமென ஜோகூர் சுல்தான் இன்று அறிவித்தார்.

வேகமாக வளர்ந்து வரும் இஸ்கண்டார் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்திருப்பதாகவும் சுல்தான் தனது 55 பிறந்தநாள் விழாவில் தெரிவித்துள்ளார்.

“இஸ்லாமியர்கள் தங்கள் வழிபாடுகளை அமைதியான முறையில் நடத்த வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமியர்களிடமிருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுகின்றது” என்று ஜூப்ளி இந்தான் சுல்தான் இப்ராகிம் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சுல்தான் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர், கடந்த 1994 ஆம் ஆண்டு வரை ஜோகூரில் வெள்ளி, சனி விடுமுறை அமலில் இருந்தது. அதன் பின்னர் தற்போது வரை சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாக இருந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது மலேசியாவில், கெடா, கிளந்தான் மற்றும் திரங்காணு ஆகிய மாநிலங்களில் வெள்ளி, சனி விடுமுறை நாட்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.