கோலாலம்பூர், நவ 27 – ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான வேலை நேர மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஜோகூரில் உள்ள வங்கிகள் ஆராய்ந்து வருகின்றன.
மலேசிய வங்கிகள் சங்கத்தின் (Association of Banks Malaysia) இயக்குநர் சுவா மெய் லின் கூறுகையில், “தனியார் நிறுவனங்கள் வேலை நேரங்களில் மாற்றம் செய்யாமல் தங்கள் நிலையிலேயே தொடரலாமா என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. எனவே நாங்களும் ஜோகூரில் உள்ள வங்கிகளுடன் கலந்தாலோசித்து வருகின்றோம். மாற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். விரைவில் எங்கள் முடிவு குறித்து அறிவிப்போம்” என்று தெரிவித்தார்.
மலேசிய வங்கிகள் சங்கத்தில், அஃபின் (Affin Bank), அலையன்ஸ் (Alliance Bank), ஆம்பேங் (Ambank), மலாயா (Maybank), ஹாங் லியாங் (Hong Leong Bank), ஸ்டாண்டர்டு சாட்டர்டு (Standard Chartered), பப்ளிக் (Public Bank), ஆர்ஹெச்பி (RHB Bank), ஓசிபிசி (OCBC Bank), ஹெச்எஸ்பிசி (HSBC Bank) மற்றும் சிஐஎம்பி (CIMB) ஆகிய வங்கிகள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.