Home நாடு கீதாஞ்சலி ஜி ‘டத்தோ’ பட்டம் பெற்றார்!

கீதாஞ்சலி ஜி ‘டத்தோ’ பட்டம் பெற்றார்!

713
0
SHARE
Ad

geethajali-g

கோலாலம்பூர், நவ 27 – ஜி.குளோபல் மீடியா நிறுவனரும், ‘மை-உமன்’ அமைப்பின் தலைவருமான கீதாஞ்சலி ஜி, இன்று பகாங் சுல்தான் முன்னிலையில் டத்தோ பட்டம் பெற்றார்.

பகாங் சுல்தானின் 83 ஆவது பிறந்தநாளையொட்டி தனக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இது  குறித்து மேலும் அவர் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, “இன்று முதல் என்னுடைய பொறுப்புகள் கூடுதலாகியுள்ளதை உணர்கிறேன். இது போன்ற கௌரவிப்புகளை நான் பெறுவதற்கு என்னுடைய உண்மையான ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் தான் காரணம். அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்கள் என் மீது வைத்துள்ள உண்மையான அன்பும், நம்பிக்கையும் தான் எனக்கு கிடைத்த பெரிய மரியாதை” என்று கீதாஞ்சலி ஜி குறிப்பிட்டுள்ளார்.