Home இந்தியா கால்நடை தீவன ஊழல் வழக்கு: லல்லு ஜாமீன் மனு விசாரணை 13–ந்தேதிக்கு தள்ளிவைப்பு

கால்நடை தீவன ஊழல் வழக்கு: லல்லு ஜாமீன் மனு விசாரணை 13–ந்தேதிக்கு தள்ளிவைப்பு

665
0
SHARE
Ad

laaluபுதுடெல்லி, நவ 29–பீகாரில் நடந்த கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஷ்டீரிய ஜனதா தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான லல்லு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

லல்லுபிரசாத் யாதவ் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி பி.சதாசிவம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதற்கு பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 13–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.