Home இந்தியா மலேசியாவில் இருந்து 7 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

மலேசியாவில் இருந்து 7 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

547
0
SHARE
Ad

41e2c372-dcdc-4384-b6bd-96f87437a6fe_S_secvpf

சென்னை, நவ  29– சென்னை விமான நிலையத்திற்கு கோலாம்பூரில் இருந்து இன்று அதிகாலை ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் பெட்டியில் தங்க கட்டிகள் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அந்த பெட்டியை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில் 7 கிலோ தங்க கட்டிகள் இருந்தன.

#TamilSchoolmychoice

தங்க கட்டிகளை பறிமுதல் செய்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது பெயர் குமார் சின்னையா (48). மலேசியாவை சேர்ந்த அவர் அங்கிருந்து அதிக அளவு தங்கம் கடத்தி வந்த போது சிக்கி கொண்டார்.

தங்கம் கொண்டு வருவதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.