Home உலகம் இந்தியரான சச்சினை புகழக்கூடாது : பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை

இந்தியரான சச்சினை புகழக்கூடாது : பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை

521
0
SHARE
Ad

Indian-cricketer-Sachin-Tendulkar-2357000

இஸ்லாமாபாத், நவம்பர் 29- சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரரான சச்சினை புகழக்கூடாது என்று, தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தாலிபான் மிரட்டல் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வீடியோவில் இந்தியரான சச்சின் டெண்டுல்கரை பாகிஸ்தான் ஊடகங்கள் புகழ்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் ஊடக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.