மலாக்கா, நவ 30 – ம.இ.கா பேராளர் மாநாடு மலாக்காவில் இன்று தொடங்கி நாளை முடிவடைகிறது. அத்துடன் கட்சியின் உயர்மட்டப் பதவிகளுக்கான தேர்தலும் இன்று நடைபெறவுள்ளது.
3 தேசிய உதவித் தலைவர் பதவிகள் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்கு 96 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இவர்களில் அனைத்து வேட்பாளர்களும் கட்சியில் புதிய மாற்றம் கொண்டு வரும் நோக்கோடு பிரச்சாரம் செய்து வருவதால் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு வேட்பாளர்கள் அனைவரும் தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதிலும் உச்சகட்டமாக, நேற்று இரவு மலாக்காவில் தேவான் துன் அலி மண்டபத்தில் நடைபெற்ற பேராளர் விருந்தில் மிகத் தீவிரமான தங்களது இறுதிக்கட்ட பிரச்சார வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, பேராளர் மாநாட்டின் இரண்டாம் நாளான நாளை பிரதமர் நஜிப் துன் ரசாக் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராளர் மாநாடு படக்காட்சிகள்: