கோலாலம்பூர், நவ 30 – புதிதாக சம்பள உயர்வு பெற்ற சிலாங்கூர் மாநில பிகேஆர் தலைவர்கள், தங்கள் சம்பளத்தில் மாதம் 1000 ரிங்கிட் அல்லது 20 சதவிகிதத்தை ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவப்போவதாக உறுதியளித்துள்ளனர்.
இந்த யோசனையை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் தான் கூறியதாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத் தலைவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சம்பள உயர்வு அளிப்பதாக கடந்த நவம்பர் 27 ஆம் தேதி காலிட் இப்ராகிம் அறிவித்தார்.
ஆனால் அந்த சம்பள உயர்வு சற்று அதிகம் என்றும், அது பற்றி காலிட் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.