Home உலகம் மகள்களுடன் புத்தக கடைக்கு சென்று வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஒபாமா

மகள்களுடன் புத்தக கடைக்கு சென்று வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஒபாமா

433
0
SHARE
Ad

obama with his daugther

வாஷிங்டன், டிச. 2- கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய ஒருமாத காலத்தை நன்றி தெரிவிக்கும் நாளாக (Thanks giving day) கடைபிடிப்பது அமெரிக்கர்களின் வழக்கம். இந்த ஒரு மாதத்தில் தங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எதிர்பாராத பரிசுகளை தந்து அசத்துவது இந்த நன்றி தெரிவிக்கும் நாளின் சிறப்பம்சமாகும்.

4 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா கடுமையான பொருளாதார சரிவை சந்தித்தபோது நன்றி அறிவிப்புக்காக அன்பளிப்புகளை வாங்குபவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சிறிய கடைகளில் மட்டுமே வாங்கி உள்ளூர் வணிகர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அமெரிக்காவின் பிரபல வங்கி துணையமைப்பான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்ட் நிறுவனம் அறிவித்தது.

#TamilSchoolmychoice

அதை தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக அன்பளிப்பு வாங்கும் அமெரிக்கர்கள் தாங்கள் வசிக்கும் உள்ளூரில் இருக்கும் சிறிய கடைகளையே தேர்வு செய்கின்றனர்.

இந்நிலையில், வடமேற்கு வாஷிங்டனில் உள்ள ஒரு புத்தக கடையின் வாசலில் நேற்று முன்தினம் அமெரிக்க அதிபரின் கார் வந்து நின்றது.

முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒபாமாவின் கார் அவ்வழியாக வருவதை கவனித்து போலீசார் போக்குவரத்தை கட்டுப்படுத்த சிரமப்பட்டனர். மகள்கள் சாஷா மற்றும் மலியாவுடன் புத்தக கடைக்குள் சென்ற ஒபாமா சுமார் ஒரு மணி நேரம் கடையை சுற்றிப்பார்த்து 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை அன்பு மகள்களுக்கு வாங்கி தந்தார்.

பாதுகாவலர்கள் கெடுபிடியின்றி சாதாரண உடையில் ஒபாமா புத்தகங்களை தேர்வு செய்த காட்சியை ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்தனர்.