Home நாடு பூஜாங் பள்ளத்தாக்கு மேம்பாட்டு பணி நிறுத்தம்!

பூஜாங் பள்ளத்தாக்கு மேம்பாட்டு பணி நிறுத்தம்!

917
0
SHARE
Ad

candi Bujang Valleyஅலோர் ஸ்டார், டிச 4  – பூஜாங் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வந்த மேம்பாட்டுப் பணியை உடனடியாக நிறுத்துமாறு கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ முக்ரிஸ் மகாதீர் உத்தரவிட்டுள்ளார்.

கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தஜோல் உரூஸ் முகமட் ஸைன் மேம்பாட்டு வேலைகளை உடனடியாக நிறுத்தும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க, மாநில மந்திரி பெசார் இப்பணியை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முக்ரீஸ் மகாதீர் கூறுகையில், “இதற்கு மேல் என்னால் எதுவும் கூறமுடியாது. அங்கு உண்மையில் என்ன நடந்தது என்று முழு அறிக்கை தேவைப்படுகிறது. காரணம் சுங்கை பத்துவில் நடந்தது குறித்து இரண்டு விதமான கருத்துகள் இருக்கின்றன. எனவே ஒரு கூட்டம் நடத்தி அதைத் தெரிந்து கொள்ளப்போகின்றேன்.” என்று முக்ரிஸ் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

 

Comments