Home கலை உலகம் நயன்தாராவுடன் நட்பாகத்தான் பழகுகிறேன் – ஆர்யா

நயன்தாராவுடன் நட்பாகத்தான் பழகுகிறேன் – ஆர்யா

567
0
SHARE
Ad

arya and nayantara

சென்னை, டிசம்பர் 4- ஆர்யா, நடிகைகளுடன் சுற்றுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே நயன்தாராவுடன் இணைத்து பேசப்பட்டார். அனுஷ்காவுடன் நெருக்கமாக பழகியதாகவும் கூறப்பட்டது. இதற்கு ஆர்யா பதில் அளித்துள்ளார்.

நடிகைகளுடன் என்னை இணைத்து பேசுவது வதந்திகள்தான். அதில் உண்மை இல்லை. நடிகர்களிடமும், நடிகைகளிடமும் நெருங்கி பழகுவேன். நடிகைகளிடம் நட்பு மட்டும்தான் வைத்துள்ளேன். என்னுடன் நடிக்கிற நடிகைகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் ஆலோசனைகள் சொல்வேன். சாப்பிட கூப்பிட்டால் செல்வேன்.

#TamilSchoolmychoice

இதை வைத்து தவறாக பேசுகின்றனர். அனுஷ்கா, நயன்தாராவுடன் இணைத்து பேசப்பட்டேன். அதில் உண்மை இல்லை. நயன்தாராவுடன் நட்பாகத்தான் பழகுகிறேன் என்று நடிகர் ஆர்யா கூறினார்.