Home நாடு மின்னல் எஃப்.எம் தயாஜியின் சர்ச்சைக்க்குள்ளான சிறுகதை!

மின்னல் எஃப்.எம் தயாஜியின் சர்ச்சைக்க்குள்ளான சிறுகதை!

722
0
SHARE
Ad

1381843_10200235295519599_1706781973_nகோலாலம்பூர், டிச 05 – வல்லினம் இதழில் வெளிவந்த, “ கழிவறையும் பழிவாங்கும் முறையும்” என்ற சிறுகதை தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. மின்னல் எஃப்.எம். அறிவிப்பாளர் தயாஜி தான் கதையை எழுதியவர்.

இந்த கதைக்கு பேஸ்புக் பக்கங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, தயாஜியின் மீது காவல்துறையில் புகார் அளிக்கவிருப்பதாகவும் பேச்சுகள் நிலவுகின்றன.

இந்துக்கடவுளையும், தாயையும் காம நோக்கோடு பார்ப்பது போன்ற கதாப்பாத்திரம் கொண்ட அந்த சிறுகதையை படித்த பலரும், மிக ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தயாஜி மீதும், வல்லினம் மீதும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இதுதவிர, சமயம் சார்ந்த இயக்கங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது என்று கூறப்படுகிறது.

வல்லினம் வெளியிட்டுள்ள அந்த கதையை படிக்க கீழ்காணும் இணைய வழித் தொடர்பைப் பயன்படுத்தவும் ..

http://vallinam.com.my/version2/?p=789