Home அரசியல் வங்காள தேசிகள் வாக்களித்தார்கள் என்று அன்வார் கூறும் காணொளி ஆதாரம்!

வங்காள தேசிகள் வாக்களித்தார்கள் என்று அன்வார் கூறும் காணொளி ஆதாரம்!

673
0
SHARE
Ad

1-anwar-video

கோலாலம்பூர், டிச 05 –  13 வது பொதுத்தேர்தலில் வங்காள தேசத்தவர்கள் வாக்களித்தார்கள் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியதாக உள்ள காணொளி ஆதாரத்தை பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று அம்னோ பொதுக்கூட்டத்தில் திரையிட்டுக் காட்டினார்.

அந்த 1 நிமிட காணொளியில் 40,000 ஆவி வாக்காளர்கள் மலேசியாவிற்கு கொண்டுவரப்பட்டார்கள் என்று பல்வேறு செய்தித்தளங்களில் கூறுவது போன்ற காட்சிகள் உள்ளன. ஆனால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில், அந்தக் காணொளியில் வங்காள தேசிகளும், இந்தோனேசியர்களும் வாக்களித்ததால் தான் தேசிய முன்னணி வெற்றியடைந்தது என்றும் அன்வார், பிரச்சாரக்கூட்டங்களில் கூறுவது போன்ற காட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.