Home நாடு வல்லினம் சர்ச்சை: “அசிங்கத்திற்கெல்லாம் அழகு முலாம் பூசுவதா?” – இளம்பூரணன் கிராமணி

வல்லினம் சர்ச்சை: “அசிங்கத்திற்கெல்லாம் அழகு முலாம் பூசுவதா?” – இளம்பூரணன் கிராமணி

813
0
SHARE
Ad

vallinam logo

கோலாலம்பூர், டிச 06 –  வல்லினத்தில் வெளிவந்த கதை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக பேஸ்புக்கில் பலர் தங்களது மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர். அவர்களில் இளம்பூரணன் கிராமணி என்பவர் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

“அசிங்கமாக எழுதிவிடுவார் ஒருவர் அதற்கு அறிவுப்பூர்வமாக பதில் சொல்வாராம் இன்னொருவர். ஏதோ அறிவுப்பூர்வமாக எழுவதாக நினைத்துக்கொண்டு அசிங்கத்திற்கெல்லாம் அழகு முலாம் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.”

#TamilSchoolmychoice

“சமுதாயத்தில் இழிவுகளாக கருதப்பட்ட, ஒழுக்கப் பிறழ்வுகளாக ஒதுக்கப்பட்ட நடைமுறைகளுக்கெல்லாம் ஞாயம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். கோயில் சிற்பத்தில் இருக்கு, ஆண்டாள் பாடல்களில் இருக்கு, வேதம் இத சொல்லுது என பலவறான ஆய்வுகளைச் சொல்லி-சொல்லி விளக்குகிறார்களாம். இதெல்லாம் இந்தக் கதைக்கு தேவையில்லாத கருதல்கள்.”

“இப்போது இன்றைய நடைமுறையில் மலேசிய மக்களின் ஒழுக்க நடைமுறைகள் சட்டவிதியாக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வரப்படுகின்றன. அந்தக் கட்டுக்குள் இந்தக் கதையை உட்படுத்தி உங்கள் அறிவுப்பூர்வமான விவாதங்களை வைத்து ஞாயப்படுத்துங்கள். பிறகு உங்கள் அறிவுத் தளம் அம்பலம் ஏறும்.”

“இந்தக் கதையில் பயன்படுத்தப்பட்ட மிக வக்கிரமான சொல்லாடகள்தான் இலக்கியங்கள். இதையும் நாம் வரவேற்கலாம். இளையோர்களுக்கு கற்பிக்கலாம். எழுதவும் கற்றுக் கொடுக்கலாம் என்றால், வாழ்க்கையின் நெறியாகக் கொள்ளலாம் என்றால் இதை எழுதியவர் முதலில் அவரே எழுதிய அசிங்கங்களைப் பின்பற்றட்டும்.”

“கதையின் கரு காமக் களியாட்டம் ஆடியவன் பழிவாங்கப்படுகிறான்… அதுதான் என் நியாயம் என்றால் அந்தக் கருத்தையே வக்கிரம் இல்லாமலும் தயாஜியால் எழுத முடியும் அந்த ஆற்றல் அவருக்கு உண்டு. அதை விட்டு-விட்டு வற்புறுத்தி வக்கிரங்களைப் புகுத்தியது எதனால்? தயாஜியின் வக்கிரத்திற்கு அறிவார்ந்த விளக்கம் தேவை.” என்று தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

மேலும் தனது மற்றொரு இடுகையில்,

“ஒரு சில மாதங்களுக்கு முன்பு, மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் பெண் படைப்பாளர் ஒருவரின் நூல் வெளியீட்டு விழாவில் பெண் படைப்பாளிகளைத் தரம் தாழ்த்திப் பேசிவிட்டார் என வல்லினக் குழு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. பெண்ணியத்தை போற்றத் தெரியாதவர், ஆணாதிக்க போக்குக் கொண்டவர் என்றேல்லாம் வசைப்பாடியது. (குறிப்பு: இதை பெ.ராஜெந்திரனுக்காக வக்காளத்து என கருதிவிடவேண்டாம்)”

“ஆனால் இன்று நடந்து கொண்டிருப்பது என்ன? தயாஜி “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்” என்ற கதையில் பெண்களை முழுக்க-முழுக்க போகப் பொருளாகவும் பாலியல் குறியீடாகவும் மட்டுமே பாவித்து எழுதியுள்ளார். இவ்விழிச் செயலுக்கு வல்லினம் இன்று 100% விழுக்காடு ஆதரவைத் தெரிவிப்பதோடு அந்தப் படைப்புக்கு வக்காளத்து வாங்கி வருகிறது. இதுதான் இந்தக் குழுவினரின் நேர்மையான போராட்டமா? இதை வைத்துப்பார்க்கும் ராஜேந்திரனின் மீது கொண்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் அந்தத் தாக்குதல் நடந்திருக்கவேண்டும். மக்கள் எண்ணுவதுபோல் பெண் படைப்பாளிகளின் நலன் கருதி அல்ல.அப்படியே வல்லினத்தின் போராட்டம் உண்மையானதாக இருந்திருந்தால், இந்த தயாஜியின் படைப்பையும் புறக்கணித்திருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை. ஏன்? ”

‘வல்லினம்’ – பச்சோந்தியினம் இரட்டைத் தனம் கொண்டது என்றும் இளம்பூரணன் குறிப்பிட்டுள்ளார்.