Home இந்தியா சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் படுதோல்வி!

சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த் படுதோல்வி!

497
0
SHARE
Ad

vijayakanth (2)

புது டில்லி, டிசம்பர் 9- டில்லியில் நேற்று நடந்த சட்டசபை தேர்தலில், சில நூறு வாக்குகள் மட்டுமே கிடைத்ததால், தன் தேசிய அரசியல் கனவு தேய்ந்து போய் விட்டதே என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நொந்து போயுள்ளார்.

தமிழக சட்டசபையில், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள, தே.மு.தி.க., ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், டில்லி சட்டசபை தேர்தலில், தமிழர்கள் அதிகம் வாழும், 11 தொகுதிகளில் போட்டியிட்டது. 

#TamilSchoolmychoice

அத்துடன், தன் மனைவி பிரேமலதாவுடன் இணைந்து, டில்லியில், ஐந்து நாட்கள் சூறாவளி தேர்தல் பிரசாரமும் செய்தார்.அப்போது டில்லி வாழ் தமிழர்களிடம், பல வாக்குறுதிகளை அள்ளி வீசினர்.

‘இனி, டில்லியில் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும், தே.மு.தி.க., போட்டியிடும்’ என்றும் கூறினர். டில்லி தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும், தே.மு.தி.க விற்கு, 1,000 ஓட்டுகளாவது கிடைக்கும் என விஜயகாந்த் நம்பினார்.

ஆனால், 11 தொகுதிகளிலும் சேர்த்து, தே.மு.தி.க விற்கு மொத்தம், 2,285 வாக்குகளே கிடைத்துள்ளன. கட்சி வேட்பாளர் யாருக்கும், ‘டிபாசிட்’ கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டில்லி சட்டசபை தேர்தலில், எதிர்பார்த்த ஓட்டுகள் கிடைக்காதது, விஜயகாந்தை சோகத்தில் ஆழ்த்திஉள்ளது. அத்துடன், தேவை இல்லாமல், டில்லி தேர்தலில், கட்சியினரை போட்டியிட வைத்து தோல்வியைத் தழுவியுள்ளார்.