Home நாடு வல்லினம் விவகாரம்: பேஸ்புக்கில் வலுக்கிறது கண்டனங்கள்!

வல்லினம் விவகாரம்: பேஸ்புக்கில் வலுக்கிறது கண்டனங்கள்!

891
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிச 10 –  வல்லினம் இலக்கிய இதழால் வெளியிடப்பட்ட, மின்னல் எப்.எம் அறிவிப்பாளர் தயாஜியின், “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்” என்ற கதை குறித்து பேஸ்புக் வட்டாரங்களில் பலர் காரி உமிழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், வல்லினம் இதழின் ஆசிரியர் என்பதோடு, தாமான் மெலாவத்தி தமிழ்ப் பள்ளியின்  ஆசிரியராகவும் பணியாற்றி வரும் நவீன், கதையை விமர்சிப்பவர்களையெல்லாம்  “பன்றிகள்” என்றும்,“மடையர்கள்” என்றும் சாடி வருகிறார்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்” என்ற கதையின் இரண்டாம் பகுதியை தான் தற்போது எழுதி வருவதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் இன்று வெளிவந்த கண்டனம்:

#TamilSchoolmychoice

மலேசிய இளம் தலைவர்கள் சங்கத்தின் (Malaysian Young Leaders Association – MYLA) வடக்கு பிரதேசத் தலைவர் ஜீவிதன் பி கணேசன் (படம்) இன்று தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில்,401904_618527371493344_486538697_n

“இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் அவரவருக்குப் பிடித்தமான விஷயங்களை பேசுவதற்கும், எழுதுவதற்கும் முழு உரிமை உள்ளது. ஆனால் தயாஜி எழுதியுள்ள இந்த கதையைப் பொறுத்தவரையில் இலக்கியம் என்ற பெயரில் இந்திய சமுதாயம் இழிவு படுத்தப்பட்டுள்ளது. கதை முழுவதும் ஆபாசமும், கொச்சையான வார்த்தைகளும், வக்கிரங்களும், அருவருக்கத்தக்க கற்பனைகளும் நிறைந்து உள்ளன. இந்தக் கதை மூலம் தயாஜி இந்து மதத்தையும் அவமதித்துள்ளார்.”

“அப்படி என்னதான் இந்த கதை கூறுகிறது? 1. ஓரினச்சேர்க்கை மற்றும் சுய இன்பம் 2. நண்பன் உடலுறவு வைப்பதைப் படம் பிடிப்பது 3. நீலப்படத்தில் எப்படி ஒரு பெண் தன் உடைகளைக் களைந்தால் என்று வர்ணிப்பது 4. தன் சொந்த தாய் குளிக்கும் போது அதை ஒளிந்திருந்து பார்ப்பது 5. இந்துக்களின் கடவுளான காளி சிலையை காமத்துடன் பார்த்து ஈர்ப்பு கொள்வது இவையெல்லாம் தான் இக்கதையில் கூறப்பட்டுள்ளது.”

“சிலர் சொல்கிறார்கள் இது இலக்கியம் என்று. என்னைப் பொறுத்தவரையில் இதை இலக்கியம் என்று சொல்வதை முதலில் நிறுத்துங்கள். காரணம் இது ஒரு செக்ஸ் கதை. இந்தக் கதையில் எந்த ஒரு நீதியும் சொல்லப்படவில்லை. இதில் இந்த சமுதாயத்திற்குத் தேவையான எந்த ஒரு நல்ல கருத்தும் இல்லை. அப்படி இருக்கையில் இதை எப்படி இலக்கியம் என்று சொல்கிறீர்கள்? இது போன்ற கதைகளை சமூகத்திற்கு சொல்ல வேண்டுமானால் தகுந்த நீதியுடன் அதன் வரையறையுடன் சொல்ல வேண்டும். ஆனால் இந்தக் கதை முழுவதும் ஆபாசம் மட்டுமே நிறைந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

1502154_511393882291827_1588424461_nமேலும் இந்த கதை குறித்து முன்னாள் மலேசிய இந்து சங்க துணைத்தலைவர் டாக்டர் எம்.பாலதர்மலிங்கம்(படம்) இன்று செல்லியலுக்கு வெளியிட்டுள்ள கருத்தில்,

“ஒரு மருத்துவர் என்ற முறையில் இந்த கதையை நான் பார்க்கிறேன். ஒருவனுக்கு இது போன்ற மனப்பிறழ்வு ஏற்படலாம். ஆனால் இக்கதையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள் மிகவும் கொச்சையாக உள்ளன. இதன் மூலம் இக்கதையை எழுதியவர் ஓர் முதிர்ச்சியற்ற எழுத்தாளர் என்பது தெரியவருகிறது. மனித மனங்களின் வக்கிரங்களை காட்ட அவர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவர் அதை எழுதிய விதம் அருவருக்கத்தக்கது.” என்று தெரிவித்துள்ளார்.