Home உலகம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு:சிங்கப்பூர் பிரதமர்

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு:சிங்கப்பூர் பிரதமர்

669
0
SHARE
Ad

lee (2)

சிங்கப்பூர், டிசம்பர் 16- வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவார்கள், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்” என சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கடந்த  8ம் தேதி, “லிட்டில் இந்தியா’ பகுதியில் நடந்த கலவரத்தையொட்டி, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் கூறியதாவது, “கடந்த வாரம் நடந்த கலவரம் ஒரு நிகழ்வு தான். இதற்காக ஒட்டு மொத்தமாக வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது சந்தேகப்படுவது தவறு. வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு உரிய நியாயமான சம்பளம் வழங்கப்படும். கலவரம் காரணமாக, வெளிநாட்டு தொழிலாளர்கள் கடுமையாக நடத்தப்படுவார்கள் என, அச்சப்பட தேவையில்லை. சிங்கப்பூர் சட்டப்படி அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று பிரதமர் லீ சீன் லூங் ஜப்பானில் மேற்கொண்ட பயணத்தின் போது கூறியுள்ளார்.