Home நாடு பிரபல மலாய் நடிகை அஸியான் காலமானார்!

பிரபல மலாய் நடிகை அஸியான் காலமானார்!

643
0
SHARE
Ad

azeanபெட்டாலிங் ஜெயா, டிச 18 – மலேசியாவின் மிகப் பிரபலமான விருது பெற்ற நடிகையான அஸியான் இர்வாட்டி (படம்) நேற்று இரவு மலாயா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் காலமானார்.

கடுமையான புற்றுநோய் மற்றும் பல்வேறு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு 8.30 மணியளவில் தனது கணவர் கைரில் அன்வார் மற்றும் குழந்தைகள் காரில் பெஞ்சமின், எல்சா இர்டாலின்னா, இன்னெசா இர்டாயாண்டி ஆகியோர் அருகில் இருக்கும் போது மரணமடைந்தார்.

மார்பகப் புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

கடந்த 1980 ஆம் ஆண்டு வெளிவந்த ‘Bawalah Daku Bersamamu’ மலாய்  பாடல் மூலம் பிரபலமடைந்த அஸியான், inaugural Malaysian Film Festival (MFF1) மூலம் ‘Esok Masih Ada’ என்ற படத்திற்காக சிறந்த நடிக்கைக்கான விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.