Home 13வது பொதுத் தேர்தல் மசீச தேர்தல்: 4 உதவித்தலைவர் பதவிகளுக்கு 9 பேர் போட்டி!

மசீச தேர்தல்: 4 உதவித்தலைவர் பதவிகளுக்கு 9 பேர் போட்டி!

968
0
SHARE
Ad

mca-300x221கோலாலம்பூர், டிச 18 – வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மசீச கட்சித் தேர்தலில், 4 உதவித்தலைவர் பதவிகளுக்கு 9 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் சிலாங்கூரைச் சேர்ந்த லீ வேய் கியாட் மற்றும் கெடாவைச் சேர்ந்த டாக்டர் லியாங் யோங் கோங் ஆகிய இருவரும் குறைந்த அனுபவம் உள்ளவர்கள்.

பொதுவாக, தலைமைத்துவ பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேசிய அளவில் அரசியலில் பரீட்சயம் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால் வேய் கியாட் மற்றும் குருன் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லியாங் ஆகியோர் அரசியலில் அறியப்படாதவர்கள்.

எனவே, பேராளர்கள் மீதமுள்ள 7 பேரில் 4 பேரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

#TamilSchoolmychoice

இதில் மிகவும் நம்பிக்கைக்குரிய வெற்றிக் கூட்டணியாக  பேராக் மாநிலத்தைச் சேர்ந்த டத்தோ லீ சீ லியாங், ஜோகூரைச் சேர்ந்த டத்தோ சுவா டீ யோங், சிலாங்கூரைச் சேர்ந்த டத்தின் படுகா சியூ மெய் ஃபன் மற்றும் ஜோகூரைச் சேர்ந்த டத்தோ டாக்டர் ஹவ் கோக் சங் ஆகியோர் கருதப்படுகின்றனர்.

இரண்டு அணிகள்

இவர்களில் சீ லியாங்,  டீ யோங் இருவரும் டத்தோஸ்ரீ டாக்டர் சுவா சொய் லெக்கின் ஆதரவாளர்கள், சியூ, டாக்டர் ஹவ் ஆகிய இருவரும் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் ஆதரவாளர்கள் ஆவர்.

இம்முறை டாக்டர் சுவா சொய் லெக் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் லியாவ் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். எனவே தேர்தலுக்குப் பின் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்க அவரது ‘வெற்றிக்கூட்டணி’ தேர்ந்தெடுக்கப்படுமா என்பது பேராளர்களின் முடிவில் தான் உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் உதவித்தலைவர்களில் ஒருவரான டத்தோஸ்ரீ சோர் சீ ஹியங் கூறுகையில், இரண்டு அணிகளையும் யோசித்து, தேர்தலுக்குப் பின் அவர்கள் இணைந்து பணியாற்றுவார்களா என்பதை அறிந்து பேராளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதே போல், பேராக் மாநிலத்தைச் சேர்ந்த அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், இது ஒரு நல்ல கலவை. போட்டியிடும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறமைகள் உள்ளன என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

கவனிக்கத்தக்க வேட்பாளர்கள்

போட்டியிடும் 9 வேட்பாளர்களில் வயது குறைந்தவர் என்றால் அது டீ யாங் (வயது 36). இரண்டாவது முறையாக லாபிஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இவர், கட்சிக்காக கடுமையாக உழைக்கக் கூடியவர்.

அதே போல் சீ லியாங் (வயது 50) பேராக் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர், காம்பார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். கடந்த மே 5 பொதுத்தேர்தல் வரை துணை உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினரும், துணை உயர் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹாவ் (வயது 40) ம் இந்தப் போட்டியில் இருக்கிறார்.

மேலும், மசீச முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவி சியூ (வயது 49) மற்றும் முன்னாள் லூமூட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ காங் சோ ஹா (வயது 63) ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.

இது தவிர, தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான டத்தோ வீ ஜெக் செங் மற்றும் கெடா மசீச தலைவர் சோங் இட் சியு ஆகியோரும் களத்தில் உள்ளனர்.