Home நாடு சபிக்கு எதிரான அன்வாரின் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு!

சபிக்கு எதிரான அன்வாரின் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு!

499
0
SHARE
Ad

anwarகோலாலம்பூர், டிச 20 – ஓரினப்புணர்ச்சி மேல்முறையீட்டு வழக்கில் மூத்த வழக்கறிஞர் முகமட் சபி அப்துல்லா தலைமை வழக்கறிஞராக செயல்படக்கூடாது என்ற எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் கோரிக்கையை மீண்டும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதிபதி ரோஸ்னா யூசோப், முகமட் சவாவி சாலே உட்பட 3 பேர் அடங்கிய குழுவில் ஒருவரான அஸியா அலி இத்தீர்ப்பை அறிவித்தார்.

இந்த வழக்கில் சபி தலைமை வழக்கறிஞராக செயல்படக்கூடாது என்று அன்வார் விடுத்த கோரிக்கையை, ஏற்கனவே கடந்த நவம்பர் 21 ஆம் தேதி 5 பேர் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியின் கையாளான சபி அப்துல்லா இந்த வழக்கில் தலைமைவகிக்கக் கூடாது என்று அன்வாரின் வழக்கறிஞர்கள் குழு கோரிக்கை விடுத்தது.

ஓரினச்சேர்க்கை வழக்கில் அன்வாருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில், தேசிய முன்னணியின் கையாளான சபி ஆஜராவதற்கு சில தனிப்பட்ட முரண்பாடுகள் இருப்பதாகவும் அன்வாரின் வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது.

சபி மீது புகார் அளிப்பேன் 

சட்டத்துறையைச் சேர்ந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் மூத்த வழக்கறிஞர் முகமட் சபி அப்துல்லாவிற்கு எதிராக புகார் அளிக்கப்போவதாக அன்வார் நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் குறிப்பிட்டார்.

“சட்டத்துறையின் விதிமுறைகளை மீறி சபி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். இன்னும் சில நாட்களில் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் அவருக்கு எதிராக புகார் அளிக்கவிருக்கிறேன்” என்று அன்வார் குறிப்பிட்டார்.