Home இந்தியா எந்தவித அரசு சலுகையும் தேவையில்லை- கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு

எந்தவித அரசு சலுகையும் தேவையில்லை- கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு

529
0
SHARE
Ad

aath ami

புதுடெல்லி, டிசம்பர் 24- டெல்லி முதல்வராக பதவி ஏற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு வீடு, கார், பாதுகாப்பு போன்ற எந்த வித அரசு சலுகைகள் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

டெல்லி அரசின் தலைமை செயலாளர், கெஜ்ரிவாலை இன்று சந்தித்து பேசினார். அப்போது தனக்கு எந்த வித அரசு சலுகையும் தேவையில்லை என்று கூறியதாக தெரிகிறது. முதல்வருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பும் கூட தேவையில்லை என்று கூறிய அவர், கடவுள் தான் தனக்கு எப்போதும் பாதுகாப்பு என்று கூறினார்.

#TamilSchoolmychoice

தனது அமைச்சர்களும் அவ்வாறே நடந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். இந்த தகவலை டெல்லி அரசும், டெல்லி காவல் துறையும் உறுதி செய்துள்ளது.