Home அரசியல் அரசாங்கத்திலிருந்து உதவி பெறுவதை பெர்காசா ஒப்புக்கொண்டது!

அரசாங்கத்திலிருந்து உதவி பெறுவதை பெர்காசா ஒப்புக்கொண்டது!

970
0
SHARE
Ad

ibrahim-ali-slider1-300x257கோலாலம்பூர், டிச 26 – தேசிய முன்னணிக்கு ஆதரவாக மலாய் மக்களை ஒன்று திரட்டுவதால் பெர்காசா இயக்கத்திற்கு அரசாங்க முகவர்கள் நிதி வழங்குவதாக அவ்வியக்கத்தின் பொதுச்செயலாளர் சையத் ஹஸ்ஸான் சையத் ஒப்புக்கொண்டுள்ளார்.

“தேசியப் பாதுகாப்புக் குழு ( National Security Council), தேசிய அரசாங்கப் பணியகம் (National Civics Bureau) மற்றும் சிறப்பு விவகாரத்துறை (Special Affairs Department) ஆகியவை பெர்காசாவிற்கு உதவுவதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அந்த நிதி மற்ற அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு (சீன, இந்திய) எந்த அளவிற்கு வழங்கப்படுகிறதோ அதே அளவில் தான் எங்களுக்கும் வழங்கப்படுகிறது.” என்று சையத் கூறியுள்ளார்.

தேசியப் பாதுகாப்புக் குழு, தேசிய அரசாங்கப் பணியகம் ஆகியவை பிரதமர் துறையை சார்ந்தவை, அதே நேரத்தில் சிறப்பு விவகாரத்துறை என்பது தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சை சார்ந்தது.

#TamilSchoolmychoice

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை இயக்கத்தின் ஆண்டுக்கூட்டத்தில் பேசிய பெர்காசா இயக்கத் தலைவர் இப்ராகிம் அலி (படம்), மலாய்காரர்களின் பிரச்சனைகளை தீர்க்காமல், அரசாங்கம் பலவீனமாகவும், பல் இல்லாமலும் தொடர்ந்து இருக்குமானால் அம்னோவிற்குப் பதிலாக பெர்காசா உருமாறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதை கடுமையாக விமர்சித்த கூட்டரசு நில அபிவிருத்தி ஆணையத்தின் (Felda) தலைவர் இஷா சமட், இப்ராகிம் அலிக்கு எதிராக கருத்துக்களைக் கூறினார்.

அவரது கருத்து குறித்து சையத் ஹஸ்ஸான் கூறுகையில், இஷாவின் கருத்து பொறுப்பற்றது. பெர்காசாவால் அம்னோ எந்த அளவிற்கு பயனடைந்துள்ளது என்பதை அவர் வெளியிடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

“திட்டங்கள் வெற்றியடைய உதவிய பெர்காசாவிற்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்பதை இஷா பட்டியலிடவேண்டும். எவ்வளவு கொடுத்தீர்கள்?மில்லியன்? பில்லியன்?” என்று சையத் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தேசிய முன்னணிக்கு ஆதரவாக மலாய் மக்களை ஒன்று திரட்டிய பெர்காசாவிற்கு, அரசாங்க முகவர்கள் அதிகமான உதவிகள் எதுவும் செய்யவில்லை” என்றும் சையத் குறிப்பிட்டுள்ளார்.