Home நாடு “இனம், மதம் கடந்து பொதுவான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்” – நஜிப் அறிவுரை

“இனம், மதம் கடந்து பொதுவான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்” – நஜிப் அறிவுரை

884
0
SHARE
Ad

IMG_9354ஜார்ஜ் டவுன், டிச 26 – அனைத்து மதங்களும், இனங்களும் ஏதாவது பொதுவான ஒரு விஷயத்தில் ஈடுபட்டு அதன் மூலம் நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும், நிலைத்தன்மையும் உருவாக முயற்சிக்க வேண்டும்.

நேற்று எஸ்ப்ளனேட் என்ற இடத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட நஜிப், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்கள் சமுதாயத்தில் பொதுவான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

“கிறிஸ்தவத்தை ஒப்பிடுகையில் இஸ்லாமில் கடவுள் குறித்த கருத்துகள் மாறுபட்டுள்ளன. ஆனால் அது குறித்து இரு தரப்பும் விவாதம் நடத்திக்கொண்டே இருந்தால் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தின் உறவு பாதிக்கப்படும். எனவே விவாதம் நடத்துவதை விட ஏதாவது ஒரு பொதுவான விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனிடையே இவ்விழாவில் கலந்து கொண்ட பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகையில், மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் ஒரு நல்ல உடன்பாடு இருப்பதற்கு இந்த விழா ஒரு சான்று. குடிமகன்கள் அனைவரும் இன மத வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையுடனும், நட்புடனும் வாழ வேண்டும் என்று தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பு 2013 என்பது தேசிய அளவிலான 6 விழாக்களில் ஒன்று. இதை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்தது.