Home நாடு இப்ராகிம் அலி மீது காவல் துறை விசாரணை நடத்தும்

இப்ராகிம் அலி மீது காவல் துறை விசாரணை நடத்தும்

1016
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை பெர்காசா ஆண்டுக் கூட்டத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி மீது காவல் துறை விசாரணை நடத்தும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறினார்.

அவரின் கூற்று இனவாதப் பதற்றத்தைத் தூண்டுவதாக இருந்தால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று சீ பீல்ட் ஆலய வருகைக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் உள்துறை அமைச்சருமான மொகிதின் கூறினார்.

இதற்கு முன்னதாக பெர்காசா, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரைச் சந்தித்ததாகவும், இனி அந்த அமைப்பு சட்டத்தை மதித்து செயல்படும் என உறுதியளித்ததாகவும் மொகிதின் கூறினார்.

#TamilSchoolmychoice

பெர்காசாவின் கூட்டத்தின் போது காவல் துறையினர் அங்கிருந்ததாகவும், காவல் துறைக்கு நடவடிக்கை எடுப்பதற்கு முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.