Home நாடு முகமட் அடிப்பிற்கு டான்ஶ்ரீ வின்சென்ட் டான் 50,000 ரிங்கிட் நன்கொடை

முகமட் அடிப்பிற்கு டான்ஶ்ரீ வின்சென்ட் டான் 50,000 ரிங்கிட் நன்கொடை

903
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஆலயத்தில் நடந்த கலவரத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமிற்கு கோடீஸ்வரர் டான்ஶ்ரீ வின்சென்ட் டான் 50,000 ரிங்கிட் நன்கொடையை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இத்தொகையானது அவரது மருத்துவ செலவு சுமையைக் குறைப்பதோடு, அவரது திருமணத்தை நடத்தவும் பயன்படும் என அவர் தெரிவித்தார்.   

முன்னதாக சீ பீல்ட் ஆலய நிலத்தினை வாங்குவதற்காக மக்கள் நிதி நன்கொடை திட்டமொன்றையும் அறிமுகம் செய்து, அதற்காக வின்சென்ட் முதல் பங்களிப்பாக 500,000 ரிங்கிட் தந்தார். பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தப்போது தற்பொழுது 2 மில்லியன் ரிங்கிட் வரையிலும் நன்கொடை திரட்டப்பட்டுள்ளதை அறிவித்தார். 

மேலும், பேசிய அவர் தற்பொழுது ஆலயம் நிலைக் கொண்டுள்ள நிலத்தின் உரிமையாளரை தமக்கு நன்கு தெரியும் எனவும், அவர் பொதுநலத்தின் மீது அதிகம் அக்கறை உள்ளவர் எனவும் கூறினார். ஆகவே, அந்நிறுவனம் ஆலய நிலத்திற்கு ஒரு சிறந்த விலையை நிர்ணயித்து உதவி புரியும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.