Home நாடு “சீ பீல்ட் ஆலய நிலத்தை வாங்க 2 மில்லியன் சேர்ந்துவிட்டது” வின்சென்ட் டான்

“சீ பீல்ட் ஆலய நிலத்தை வாங்க 2 மில்லியன் சேர்ந்துவிட்டது” வின்சென்ட் டான்

1358
0
SHARE
Ad

சுபாங் – சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலயத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் நிலம், நீர்வளம், இயற்கை வள அமைச்சரும் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவருமான  சேவியர் ஜெயகுமார் மற்றும் கோடீஸ்வர வணிகர் வின்சென்ட் டான் இருவரும் வருகை தந்தார்கள்.

சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தை அதே இடத்தில் நிலை நிறுத்த, அந்த ஆலயம் அமைந்திருக்கும் இடத்தை நாமே பொதுமக்களிடம் நிதி திரட்டி வாங்குவோம் என வின்சென்ட் டான் அறிவித்திருந்தார். அந்த நிதிக்கு தனது பங்காக 5 இலட்சம் ரிங்கிட்டையும் வழங்குவதாக அவர் தெரிவிக்க அவரைத் தொடர்ந்து மேலும் இரு சீன வணிகர்கள் தலா 5 இலட்சம் ரிங்கிட் தருவதாக வாக்களிக்க தற்போது இந்த நிதிக்கு 15 இலட்சம் ரிங்கிட் சேர்ந்திருப்பதாக நேற்று வின்சென்ட் டான் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து வின்சென்ட் டான் சீ பீல்ட் ஆலயத்திற்கு சேவியர் ஜெயகுமாருடன் இன்று மாலை வருகை தந்து ஆலயம் அமைந்திருக்கும் வளாகத்தைப் பார்வையிட்டார். அங்கு குழுமியிருந்த பக்தர்கள், பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் உரையாடினார்.

#TamilSchoolmychoice

தற்போது சீ பீல்ட் ஆலயம் அமைந்திருக்கும் நிலத்தின் உரிமையாளர்களான அயாலா கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியைத் தனக்கு நன்கு தெரியும் என்றும் அவர் மதிப்புமிக்கவர், நிறைய அறப்பணிகள் செய்தவர் என்றும் வின்சென்ட் டான் கூறினார்.