பெஸ்தாரி ஜெயா: சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பெஸ்தாரி ஜெயா நகரில் மக்கள் வீடமைப்புத் திட்டத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 15) அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங், சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு, வணிகப் பிரமுகர் டான்ஸ்ரீ வின்சென்ட் டான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அங்கு குழுமியிருந்த இந்திய சமூகத்தினருடன் அன்வார் அளவளாவினார். அவர்களுடன் காப்பியும் அருந்தினார்.
அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மக்களிடையே உரையாற்றும்போது நாட்டு விவகாரங்கள் குறித்தும் நடப்பு அரசியல் பிரச்சனைகள் குறித்தும் அன்வார் விளக்கமளித்தார்.
அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியின் நிறைவுக்குப் பின்னர் அந்த வட்டாரத்தைச் சுற்றிப் பார்த்த அன்வார் அங்குள்ள சிறுவணிகர்கள், கடை உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார்.