Home நாடு “நடுநிலைமையான தலைவர் என்பதை நிரூபியுங்கள்” – நஜிப்புக்கு கிட் சியாங் சவால்

“நடுநிலைமையான தலைவர் என்பதை நிரூபியுங்கள்” – நஜிப்புக்கு கிட் சியாங் சவால்

588
0
SHARE
Ad

IMG_9354கோலாலம்பூர், டிச 26 – இனம், மதம் கடந்து வாழ்வோம் என்று மற்றவர்களுக்கு வெறும் வார்த்தைகளால் கூறுவதை, பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது செயல்பாடுகள் மூலம் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சவால் விடுத்துள்ளார்.

நேற்று பினாங்கில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திறந்த இல்லை உபசரிப்பில் கலந்து கொண்ட நஜிப் துன் ரசாக்,  இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்கள் சமுதாயத்தில் உள்ள பொதுவான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லிம் கிட் சியாங் இவ்வாறு இன்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், நஜிப் தனது உரையில் அதிகமான பொறுப்பற்ற அரசியல்வாதிகள் என்ற வார்த்தையை மேற்கோள் காட்டி கூறியுள்ளார். ஆனால் அவர்கள் எல்லாம் அவரது சொந்த கட்சியான அம்னோவில் தான் உள்ளார்கள் என்றும் லிம் தெரிவித்துள்ளார்.

அரசியல் பச்சோந்திகளைப் போல் பொதுமேடைகளிலும், விழாக்களிலும் இனவாதமற்ற அரசியல் குறித்து வெற்று வார்த்தைகளைக் கூறுவதை விட, மதம், இனம் கடந்த நடுநிலைமையான மனிதராக அவர் தனது செயல்கள் மற்றும் நம்பிக்கைகளில் காட்ட வேண்டும் என்றும் லிம் கூறியுள்ளார்.