Home இந்தியா மோடி மீதான புகாரை விசாரிக்க விசாரணை ஆணையம்

மோடி மீதான புகாரை விசாரிக்க விசாரணை ஆணையம்

532
0
SHARE
Ad

Narendra-Modi-Pardaphash-79064

புதுடெல்லி, டிசம்பர் 26- குஜராத்தில் இளம் பெண்ணை நரேந்திர மோடி அரசு நோட்டமிட்ட விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குஜராத்தை சேர்ந்த இளம்பெண்ணை முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் காவல்துறையினரை உளவு பார்த்ததாக ‘கோப்ரா போஸ்ட்‘ என்ற புலனாய்வு பத்திரிகை தகவல் வெளியிட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக மோடியின் நெருங்கிய நண்பரும், குஜராத் உள்துறை முன்னாள் அமைச்சருமான அமித் ஷா – காவல்துறை அதிகாரி சிங்கால் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் அடங்கிய குறுந்தட்டும் வெளியிட்டது.

#TamilSchoolmychoice

2005ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரில் நடந்த விழாவின்போது மோடியை சர்ச்சைக்குரிய இளம்பெண் சந்தித்து பேசிய புகைப்படங்களை ‘குலைல்’ என்ற புலனாய்வு இணைதளம் வெளியிட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.