Home இந்தியா தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டுகிறார் ராகுல்

தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டுகிறார் ராகுல்

573
0
SHARE
Ad

rahul-gandhi1

புதுடில்லி, டிசம்பர் 27- காங்கிரஸ் துணை தலைவரான  ராகுல் வரவிவருக்கும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும்  வியூகம் மற்றும் மத்திய அரசின மக்கள் பயன்பெறும் திட்டங்களை எப்படி செயல்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து  காங்கிரஸ்  ஆளும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் 12 மாநில முதல்வர்களுடன் தேர்தல் குறித்து ஆலோசிக்கிறார் ராகுல்.

4 மாநிலங்களில் ஏற்பட்ட படு தோல்விக்குப் பிறகு நடக்கும் இந்த முதல் கூட்டத்தில், ஊழல் மற்றும் விலைவாசி உயர்வால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், 12 மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரத்தை எப்படி நடத்துவது என்பது பற்றி ஆராயப்பட்டது.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் கட்சி லோக்பால் சட்டத்தை கொண்டு வந்து இருப்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் பிரசாரம் செய்ய வியூகம் வகுக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி, பண வீக்கம் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர்களுக்கு ராகுல் அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் உணவு பாதுகாப்பு மசோதா பற்றியும் விவாதிக்கப்பட்டது. இதை சிறப்பாக செயல்படுத்தினாலே போதும். மக்களின் மனதில் இடம் பிடித்து விடலாம் என்று ராகுல் கூறியுள்ளார்.