Home உலகம் தாய்லாந்தில் பஸ் விபத்து! பலி எண்ணிக்கை 32!

தாய்லாந்தில் பஸ் விபத்து! பலி எண்ணிக்கை 32!

526
0
SHARE
Ad

imageபேங்காக், டிச 27 – தாய்லாந்தில் இன்று அதிகாலை நடந்த பஸ் விபத்தில் இதுவரை 32 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

தாய்லாந்தின் சாயங் ராய் மாநிலத்தில் இருந்து 40 பயணிகளுடன் பேட்டச்பூன் மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருந்த பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சுமார் 50 அடி ஆழம் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 30 பேர் பலியானார்கள். 10 பேர் படுகாயம் அடிந்தனர். 5 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. பள்ளத்தாக்கில் இருந்து 27 பேரின் உடல்கள் மீடகப்பட்டு உள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்

#TamilSchoolmychoice

கடந்த அக்டோபர் மாதம் இதே பகுதியில் நடந்த விபத்தில் 20 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடதக்கது.

உலக சுகாதர அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் தாய்லாந்தில் ஒரு லட்சம் பேரில் 38.5 சதவீதம் சாலைவிபத்தில்  மரணமடைகின்றனர். இது தென்கிழக்கு ஆசிய பகுதியில் 18.5 சதவீதமாக உள்ளது என குறிப்பிட்டு உள்ளது.