Home வாழ் நலம் கைகளின் கருமை நிறம் மறைய வழிகள்

கைகளின் கருமை நிறம் மறைய வழிகள்

817
0
SHARE
Ad

arm

கோலாலம்பூர், டிசம்பர் 28 – உடலிலேயே கைகள் தான் அதிக அளவில் சூரியக்கதிர்களின் தாக்கத்திற்கு உட்படுகின்றன. அப்படி அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கத்தினால், கைகளானது கருமையடைந்து விடுகின்றன.

முகம் ஒரு நிறத்திலும், கைகள் ஒரு நிறத்திலும் இருந்தால் பார்க்கவே நன்றாக இருக்காது. இத்தகைய கருமையைப் போக்க வேண்டுமானால், கைகளுக்கும் சரியான பராமரிப்பு  அளிக்க வேண்டும். முகத்தை பராமறிப்பது போல் நாம் நம் கைகளையும் பராமரிக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

இப்போது கைகளில் உள்ள கருமையைப் போக்க உள்ள வழிமுறைகளை பார்க்கலாம்..

* பப்பாளியில் ஒரு துண்டைக் கொண்டு தினமும் கைகளை தேய்த்து   ஊற வைத்து கழுவி வந்தால் கைகளில் உள்ள கருமையானது படிப்படியாக நீங்கிவிடும்.

* பாலும் சருமத்தில் கருமையைப் போக்க உதவும் ஒரு சிறந்த பொருள். அதற்கு காய்ச்சாத பாலை தினமும் குளிக்கும் முன், தடவி ஊற வைத்து, நீரில் நனைத்து துடைத்துவிட்டு, பின் குளிக்க செல்ல வேண்டும்.

* கடலை மாவை பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பசையாக செய்து, அதனை கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

* வெள்ளரிக்காய் சாறு அல்லது உருளைக்கிழங்கு சாறு சேர்த்து, கருமையான இடங்களில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். அதுமட்டுமின்றி, இந்த முறையை வெளியே செல்லும் முன்பு செய்துவிட்டு சென்றால், கைகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

* உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை சம அளவு எடுத்து, அதனை அரைத்து, கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்பு குளிர்ச்சியான நீரில் கழுவினால்  கைகளில் உள்ள கருமை நிறமானது மங்கும். இதை தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேற்கூறியவற்றை தவறாமல் செய்து வந்தால், நிச்சயம் கைகளில் உள்ள கருமை மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கலாம்.