Home இந்தியா மோடி பிரதமரானால் நாட்டிற்கு பேரழிவே! மன்மோகன் சிங் பேட்டி

மோடி பிரதமரானால் நாட்டிற்கு பேரழிவே! மன்மோகன் சிங் பேட்டி

494
0
SHARE
Ad

manmohan singh

புதுடெல்லி, ஜன 3- பிரதமர் மன்மோகன் சிங் 3 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டிகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

* நாட்டின் நல்ல எதிர்காலத்துக்கு பாதை அமைத்துள்ளதாக மன்மோகன் சிங்  கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

* மேலும் 4 மாநில சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். தேர்தல் தோல்வியில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொண்டுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார்.

* பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய பொருளாதாரம் 2007 – 08ல் 9 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

*சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக இந்திய பொருளாதாரமும் சரிவை சந்தித்தது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா அடைந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் அதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

* 2004 – 2011 வரையிலான காலத்தில் நாட்டின் வறுமை நிலை கணிசமாக குறைந்துள்ளது என்றும் கடந்த 9 ஆண்டுகளில் 13 கோடியே 80 லட்சம் பேர் வறுமைக்கோட்டில் இருந்து மேல்நிலைக்கு வந்துள்ளனர்.

* நாட்டின் வேளாண் வளர்ச்சி விகிதம் கடந்த 9 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.

* கல்வியை மேம்படுத்த புதிய கல்வி நிறுவனங்கள், புதிய பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

* தனிநபர் சராசரி நுகர்வு கடற்த 9 ஆண்டுகளில் நகரம், கிராமப்புறங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான வேறுபாடும் கணிசமாக குறைந்துள்ளது.

* ஐக்கிய முற்போக்கு கூட்டணி நிறைவேற்றிய உணவு உத்திரவாதச் சட்டத்தால், நாட்டு மக்களுக்கு உணவுப்பொருள்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

* பணவீக்க விகிதம் கவலை அளிக்கும் நிலையில் உள்ளது உண்மைதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

* விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.உணவுப்பொருள் போக்குவரத்து , சந்தையிடலை மேம்படுத்துவதன் மூலம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும். பழம், காய்கறிகள் போன்ற அழுகும் பொருட்களை சந்தையிடும் ஏற்பாடுகள் மேம்படுத்தப்படவேண்டும்.

* 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்கும் எண்ணம் இல்லை என்று மன்மோகன் திட்டவட்டம்

* 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்தவரே அடுத்த பிரதமராக பொறுப்பேற்பார். தேர்தலுக்குப் பின் வரும் பிரதமரிடம் தாம் பொறுப்பை ஒப்படைப்பேன் என்றும் அறிவித்தள்ளார்.

* பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி தகுதியானவர்.

* பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி உரிய நேரத்தில் அறிவிக்கும்.

* தவறு செய்தவர்கள் யாரும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது.

* இளைய தலைமுறை நாட்டை சரியான பாதையில் செலுத்தும்- பிரதமர் நம்பிக்கை

* வரவிருக்கும் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றாலும் தாம் பிரதமராக இருக்கப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

* ஊழல் முறைகேடு குறித்த செய்திகளை ஊடகங்கள் தான் பூதாகரமாகிவிட்டதாக குற்றம் சாட்டடியுள்ளார். மேலும் தவறு செய்தவர்கள் யாரும் சட்டத்தில் இருந்த தப்பிக்க முடியாது எனவும் உறுதியளித்துள்ளார்.

* 9 ஆண்டுகளுக்கு முன் பதவி ஏற்கும்போது இருந்த அதே நிலையிலேயே தற்போதும் உள்ளதாக கூறியுள்ளார். பதவியை பயன்படுத்தி யாருக்கும் எந்த சலுகையையும் அளித்ததில்லை.

* நரேந்திர மோடி பிரதமர் ஆனால் நாட்டுக்கு பேரழிவு வந்து சேரும்.

* இந்திய, அமெரிக்க உறவுக்கு அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.

* இலங்கை தமிழர் மீது இந்திய அரசுக்கு அக்கறையல்ல என்பது சரியல்ல. இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தம் பேட்டியில் கூறியிருந்தார்.