Home கலை உலகம் ஆம் ஆத்மி கட்சியில் நடிகை நமீதா?: விரைவில் அறிவிப்பு

ஆம் ஆத்மி கட்சியில் நடிகை நமீதா?: விரைவில் அறிவிப்பு

546
0
SHARE
Ad

Namitha Green Saree Stills Photo Gallery

புது டெல்லி, ஜன 4 – நடிகை நமீதா ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நமீதாவுக்கு சமீப காலமாக சமூக சேவை பணிகளில் நாட்டம் ஏற்பட்டு உள்ளது. ரசிகர்களை ரத்ததானம் செய்ய வைத்தார். பெண்களுக்கு கழிவறைகள் கட்டி கொடுத்தார். தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

#TamilSchoolmychoice

நமீதாவின் நடவடிக்கைகள் அரசியலில் ஈடுபடப்போவதை உறுதிபடுத்துவதாக இருந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அரசியல் ஆர்வம் இருக்கிறது என்றார். விரைவில் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கூறினார். ஆனால் எந்த கட்சியில் சேருவார் என்பதை தெரிவிக்கவில்லை.

நமீதா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பாரதீய ஜனதா கட்சியில் அவர் சேருவார் என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி குறுகிய காலத்திலேயே டெல்லியில் ஆட்சியை பிடித்தது. நடிகர், நடிகைகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எனவே நமீதா ஆம் ஆத்மி கட்சியில் சேருவார் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை வலுப்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி கட்சியை நமீதா பாராட்டவும் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ஆம் ஆத்மி கட்சி சாதாரண மக்களின் குரலாக ஒலிக்கிறது. அக்கட்சியினருக்கு என் வாழ்த்துக்கள். நான் விரைவில் அரசியலுக்கு வருவேன். முழு நேர அரசியல்வாதியாகவும் மாறுவேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றார்.