Home அவசியம் படிக்க வேண்டியவை பொங்கல் அன்று அழகிரிக்கு விஜயகாந்த் பதிலடி!

பொங்கல் அன்று அழகிரிக்கு விஜயகாந்த் பதிலடி!

624
0
SHARE
Ad

vijayakanth (2)சென்னை, ஜன 9 – ‘தே.மு.தி.க.,வுடன், தி.மு.க., கூட்டணி சேர்ந்தால் உருப்படாது’ என்று தி.மு.க தென்மண்டலஅமைப்பு செயலர், மு.க.அழகிரி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த கருத்துக்கு, கருணாநிதி எச்சரிக்கை விடுத்த அதே வேளை, தேமுதிக சார்பிலும் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

வரும் ஜனவரி 12 ஆம் தேதி தேமுதிக தலைவரான விஜயகாந்த் அதற்கு பதிலடி கொடுப்பார் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தே.மு.தி.க வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க பெரிதும் விரும்புகிறது. தி.மு.க வுடன் தே.மு.தி.க., இணைந்தால் மகிழ்ச்சி’ என கருணாநிதி கூறிவந்த வேளையில், “விஜயகாந்திற்கு அரசியல் தெரியாது. அவருடன் திமுக இணைந்தால் உருப்படாது” என்று அழகிரி கருத்துத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அழகிரியின் கருத்துக்கு, தி.மு.க தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.