Home இந்தியா “எம்ஜிஆர் ஆதரித்த திட்டத்தை ஜெயலலிதா மறுக்கிறாரா?” – கருணாநிதி கேள்வி

“எம்ஜிஆர் ஆதரித்த திட்டத்தை ஜெயலலிதா மறுக்கிறாரா?” – கருணாநிதி கேள்வி

870
0
SHARE
Ad

Karunanidhi-Jayalalitha-1சென்னை, ஜன 9 – “எம்.ஜி.ஆர்., ஆதரித்த, சேது சமுத்திர திட்டத்தை, இப்போது, முதல்வர் ஜெயலலிதா மறுக்கிறாரா?” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், ஒரு மூத்த வழக்கறிஞரை, தமிழக அரசின் சார்பில் முறையாக, வாதாட வைக்க முன்வராத அ.தி.மு.க அரசு தான் தற்போது சேது சமுத்திர திட்டத்தை, எந்த வழியிலும் துவங்கக் கூடாது என மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறது.”

“கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது, அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில், “சேது சமுத்திரத் திட்டத்திற்கு போதிய நிதியை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, மத்திய அரசை அ.தி.மு.க., வலியுறுத்தும்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.அப்போது அறிக்கையில், “சேது சமுத்திரத் திட்டம் வேண்டும்” என திட்டவட்டமாக கூறி விட்டு, தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியுறுத்துகிறார்.”

#TamilSchoolmychoice

“அவர் அ.தி.மு.க.,வின் கொள்கையை தற்போது ஏற்கவில்லையா? அல்லது எம்.ஜி.ஆர்., ஆதரித்த திட்டத்தை இப்போது மறுக்கிறாரா?” இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.