Home இந்தியா டில்லியில் மீண்டும் பயங்கரம்! டென்மார்க் பெண் பாலியல் பலாத்காரம்!

டில்லியில் மீண்டும் பயங்கரம்! டென்மார்க் பெண் பாலியல் பலாத்காரம்!

560
0
SHARE
Ad

indiagateபுதுடில்லி, ஜன 16 – டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 51 வயது பெண் ஒருவர் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

கடந்த செவ்வாக்கிழமை மாலை டில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு தனது தங்கும் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், வழி தவறி பாஹர்கஞ்ச் ரயில்நிலையத்தை அடைந்துள்ளார்.

அங்கு இருந்த சிலரிடம் தனது தங்கும் விடுதியின் பெயரை சொல்லி வழி கேட்டுள்ளார்.அந்தப் பெண் தனியாக வந்ததை தெரிந்து கொண்ட எட்டு பேர் கொண்ட கும்பல், அந்தப் பெண்ணை அடித்து உதைத்து, ஒதுக்குபுறமாக தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்பேசியையும் பறித்துச் சென்றுள்ளது.

#TamilSchoolmychoice

தனக்கு நடந்த கொடுமை குறித்து உடனடியாக டென்மார்க் தூதரகத்திற்கும், டில்லி காவல்துறைக்கும் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் அளித்த தகவலின்படி அதிரடி சோதனையில் இறங்கிய டில்லி காவல்துறையினர், ரயில் நிலையம் பகுதியில் பதுங்கியிருந்த 8 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தற்போது டில்லி வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.