Home இந்தியா காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் இல்லை!

காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் இல்லை!

486
0
SHARE
Ad

rahul_gandhiபுதுடில்லி, ஜன 17 – இன்று நடக்கவிருக்கும் காங்கிரஸ் -ன் செயற்குழு கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிரசாரத்தை வழிநடத்துவார் என்று உயர்மட்ட ஆலோசனைக் குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நேற்று காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது. அதில், சோனியா, ராகுல், ஜனார்த்தன் திவேதி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் வேட்பாளரை தேர்தலுக்கு முன்பே அறிவிக்க முடியாது என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், ராகுல் தேர்தல் பிரச்சாரத்தை வழி நடத்துவார் என்றும் சோனியா  அறிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்ட நரேந்திர மோடி பின்னர் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இப்போதைய சூழ்நிலையில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது மறைமுகமாகவே உள்ளது.