கோலாலம்பூர், ஜன 20 – இன்று முதல் 2020 ஆம் ஆண்டு வரை செயல்படவுள்ள புதிய தேசிய வாகனக் கொள்கை 2014 ன் படி, 2018 ல் மலேசியாவில் கார்களின் விலை 20 முதல் 30 சதவிகிதம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வாரம் அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இந்த தகவல் கசிந்துள்ளது. இது குறித்த மேலும் பல தகவல்கள் இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று முதல், அனைத்து கார் தயாரிப்பாளர்களும் மலேசியாவில் தங்களது கார்களை தயாரிக்கலாம். குறிப்பாக அது 100 சதவிகிதம் வெளிநாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதற்கு அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறிப்பிட்ட அளவீடுகளோடு எரிசக்தி திறன் கொண்ட கார் தயாரிப்புக்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.