Home அவசியம் படிக்க வேண்டியவை 100 அடி நீள சொகுசு கார் கின்னஸில் இடம் பிடித்தது

100 அடி நீள சொகுசு கார் கின்னஸில் இடம் பிடித்தது

617
0
SHARE
Ad

car

கலிபோர்னியா, ஜன 21- கலிபோர்னியாவில் உள்ள ஜே ஓபெர்க் நிறுவனம் உலகிலேயே மிக நீளமான சொகுசு கார் ஒன்றை  தயாரித்துள்ளது. இந்த காரின் நீளம் 100 அடி ஆகும். 26 சக்கரங்களை கொண்ட இந்த காரில், இரயில் வண்டியைப் போல் முன்னும் பின்னும் ஓட்டுநர்களின் இயக்கும் அறைகள் அமைந்துள்ளது.

மேலும், குறுகிய தெருக்களிலும் சுலபமாக திரும்பும் வகையில் காரின் நடுப்பகுதி வளைந்து மடியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வெறும் கண்காட்சிகளில் வைக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த கார் முதலில் தயாரிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஹாலிவுட்டில் உள்ள ஆடம்பர மாளிகைக்கு இணையாக இந்த காரின் உள்ளே அனைத்து சொகுசு வசதிகளும் செய்யப்படுள்ளன. குளியல் தொட்டி (ஜக்குஸி), பார், ஹெலிபேட், செயற்கைக்கோள் ஆண்டெனா உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய சிறிய அரண்மனை போல் உள்ளது இந்த ‘மெகா’ கார் உள்ளது..

இந்த சொகுசு காருக்கு சட்டபூர்வமாக சாலைகளில் ஓடுவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. எனினும், சினிமா படப்பிடிப்பு, திருமண ஊர்வலம் போன்றவற்றிற்கு இந்த காரை வாடகைக்கு எடுக்க உலக கோடீஸ்வரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலகின் மிக நீளமான சொகுசு கார் என்று கின்னஸில் இடம் பிடித்துள்ள இந்த காரின் ஒரு மணி நேர வாடகை, பல லட்சம் வரையிலும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.