கோலாலம்பூர், ஜன 21- பொருள்களின் விலை உயர்த்தப்படும் நடவடிக்கையை அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது. இதனால், “ஓப்ஸ் ஹர்கா” எனப்படும் விலைக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு நடவடிக்கை நேற்று நாடு முழுவது தொடங்கப்பட்டது.
விதிமுறைகளை மீறி விலையை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடும் தரப்பினர் மீது விலைக்கட்டுப்பாடுச் சட்டத்தின் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டு வர்த்தக பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹாசன் மாலேக் தெரிவித்தார்.
வியாபார இடங்களில் இந்த ஓப்ஸ் ஹர்கா நடவடிக்கையின் வாயிலாக திடீர் சோதனைகள் நடத்தப்படும். மொத்தம் 1800 அமலாக்க அதிகாரிகளும் 1100 விலைக் கண்காணிப்பு அதிகாரிகளும் இந்த சோதனையில் ஈடுபவர் என்று தெரிவித்தார்.