Home உலகம் காணாமல் போனவர்களை விசாரிக்க இலங்கையில் மூவர் குழு நியமனம்

காணாமல் போனவர்களை விசாரிக்க இலங்கையில் மூவர் குழு நியமனம்

455
0
SHARE
Ad

sri lanka

கொழும்பு, ஜன 23-  இலங்கையில் நடந்த சண்டையின் போது காணாமல் போனவர்கள் குறித்து ஆய்வு நடத்த  மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே  30 ஆண்டுகளாக நடந்த சண்டையில் ஏராளமானோர் காணாமல் போயினர்.

இது குறித்து விசாரணை நடத்தும் படி ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் சர்வதேச நாடுகள் வலியுறுத்தின. இதையடுத்து, போரின் போது காணாமல் போனவர்கள் குறித்து இலங்கை அரசு கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.