Home வாழ் நலம் தலைவலியா ?

தலைவலியா ?

547
0
SHARE
Ad

Man with Headache

கோலாலம்பூர், ஜன 24-  பெரும்பலனோருக்கு தலைவலி பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. தூக்க பற்றாக்குறை, மன உளைச்சல், அதிகப்படியான எண்ணங்கள் தலைவலியை ஏற்படுத்துகிறது. தலைவலி பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் மாலை மலர் செய்தி இணைய  தளம் சில குறிப்புகளை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு

காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் காலை கடன்களை முடித்து  ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது  வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால்  நாள்பட்ட தலைவலி குறையும்.

#TamilSchoolmychoice

தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி 15  நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால் தலைவலி நீங்கும்.

தலைவலி உடனடியாக நீங்க , சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள்  கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால் நல்ல  நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக்  கொண்டு நன்றாக அரைத்து எடுத்து நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து  போகும்