Home நாடு மருத்துவப் படிப்பில் சேர தகுதிகள் அதிகரிக்கப்படலாம் – சுப்ரா

மருத்துவப் படிப்பில் சேர தகுதிகள் அதிகரிக்கப்படலாம் – சுப்ரா

442
0
SHARE
Ad

Dr S. Subramaniamகாஜாங், ஜன 24 – மலேசியாவில் மருத்துவம் படிப்பதற்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் அதிகரிக்கப்படலாம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மருத்துவப்படிப்பில் சேர எஸ்.பி.எம் (SPM) தகுதிகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் அமைச்சர் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்துவரும் மருத்துவப் பட்டதாரிகளை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து கல்வியமைச்சு மலேசியாவில் உள்ள பல்கலைக்கழங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது என்றும் சுப்ரா தெரிவித்துள்ளார்.

“முடிந்தால் இந்த திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் மருத்துவப் பட்டம் பெற்று வரும் மருத்துவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்க போதுமான வசதிகள் இல்லை” என்று உலு லங்காட்டில் நேற்று டெங்கி பரவும் இடங்களைப் பார்வையிட்ட சுப்ரா தெரிவித்தார்.