பாங்காக், ஜன 24- பிப்ரவரி 2ம் தேதி தேர்தல் நடக்கும் என்று இங்லக் அறிவித்தார். தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி அரசே தேர்தல் தேதியை அறிவித்துள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பான முடிவு இன்று வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு அரசியல் புரட்சி ஏற்பட்டதால் தாய்லாந்தின் முன்னாள் அதிபர் தாக்ஷின் ஷினாவத்ரா நாட்டை விட்டு வெளியேறி, துபாயில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, இவரது சகோதரி இங்லக் ஷினாவத்ரா அதிபரானார்.
புதிய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘ரெட் ஷர்ட்’ (சிவப்பு சட்டை) என்ற பெயரில் அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்று குவான்சாய் பிரய்பன்னா என்பவரின் தலைமையில் கடந்த 2010ம் ஆண்டு நடந்தது. இந்நிலையில் தற்போது அரசியல் தலைவர்களுக்கான பொது மன்னிப்பு வழங்கும் புதிய மசோதா ஒன்றை இங்லக் கொண்டு வந்தார்.
இந்த மசோதா மூலம் இங்லக்கின் சகோதரர் தாக்ஷினை மீண்டும் தாய்லாந்துக்குள் அனுமதிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக கூறி, அரசுக்கு எதிராக தலைநகர் பாங்காக் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆர்ப்பாட்டம் வெடித்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.