Home தொழில் நுட்பம் ஆண்டிராய்டுகளுக்கான செல்லியலின் பதிகை 2.0.6 பதிவிறக்கத்திற்கு தயார்!

ஆண்டிராய்டுகளுக்கான செல்லியலின் பதிகை 2.0.6 பதிவிறக்கத்திற்கு தயார்!

670
0
SHARE
Ad
Icon-512@2x

கோலாலம்பூர், ஜன 28 – ஐஓஎஸ்(IOS) மற்றும் ஆண்டிராய்டு (Android) இயங்கு தளங்களுக்கான செல்லியலின் பதிகை 2.0, கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த பதிகை 2.0 ல் புதிய முகப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட செய்திப் பிரிவுகள், சுலபமாக செய்திப் பிரிவுகளை தேர்வு செய்து படிக்கும் வகையில் பயனர்களுக்கு உதவும் அமைப்பு என இரண்டு இயங்குதளங்களுக்கும் பல புதிய மேம்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எனினும், ஆண்டிராய்டு இயங்குதளத்தில், தேடல் (search), முழு திரை காணொளி (full-screen video) மற்றும், செய்திகளில் இணைக்கப்பட்டுள்ள தொடர்புகள் ( linked stories), செல்லியலின் மின்னல் செய்திகள் (push notifications) ஆகியவற்றில் சில சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, தற்போது பதிகை 2.0.6 கூகுள் பிளே (Google Play) ல் பதிவிறக்கம் செய்யத் தயாராக உள்ளது.

#TamilSchoolmychoice

பயனர்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட பழைய பதிகையை நீக்காமலேயே இந்த புதிய மேம்பாடுகள் கொண்ட புதிய பதிகை 2.0.6 ஐ பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த பதிகையில் செல்லியலின் செய்திகளுடன் இணைக்கப்படும் நேர்காணல் காணொளிகளை தற்போது காண முடியும். இதற்கு முன் ஆண்டிராய்டுகளுக்கான பதிகையில் காணொளிகளை காண இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.