Home இந்தியா சட்டசபை தேர்தல்- திரிபுராவில் நாளை ஓட்டுப்பதிவு

சட்டசபை தேர்தல்- திரிபுராவில் நாளை ஓட்டுப்பதிவு

728
0
SHARE
Ad

tripura-electionஅகர்தலா, பிப். 13- திரிபுரா மாநில சட்ட மன்ற தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

60 தொகுதிகளுக்கான நாளைய ஓட்டுப்பதிவில் 249 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

#TamilSchoolmychoice

5-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் அந்த கட்சி உள்ளது. மாணிக் சர்கார் முதல்-மந்திரியாக உள்ளார்.

1998-ம் ஆண்டில் இருந்து அவர் திரிபுரா முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். திரிபுரா தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 56 தொகுதிகளிலும், ஆர்.எஸ்.பி. 2 தொகுதியிலும் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பார்வர்டு பிளாக் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது.

எதிர்கட்சியான காங்கிரஸ் 48 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள் சுதிப்ராய் பர்மன் முக்கிய வேட்பாளராக உள்ளார்.

காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஐ.என்பி.பி கட்சி 11 இடங்களிலும், திரிபுரா தேசிய மாநாட்டு கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் 249 வேட்பாளர்களில் 14 பேர் பெண்கள் ஆவார்கள்.

மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் 23 லட்சத்து 53 ஆயிரத்து 505 பேர் ஆகும். மொத்தம் உள்ள 3041 வாக்கு மையங்களில் 409 வாக்கு மையங்கள் அதிக பதட்டம் நிறைந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவ பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.