Home இந்தியா அழகிரியை நீக்கியது ஏன் ? – மனம் திறந்தார் கருணாநிதி

அழகிரியை நீக்கியது ஏன் ? – மனம் திறந்தார் கருணாநிதி

559
0
SHARE
Ad

karuna_1375724fசென்னை,ஜன 28 – திமுக வின் தென் மண்டல செயலாளர் மு.க.அழகிரி நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று செய்தியாளர்களிடம் மனம் திறந்து கூறியுள்ளார்.

“ஸ்டாலின் இன்னும் 3 மாதங்களில் இறந்து விடுவார் அவருக்கு எதற்கு பதவி வழங்க வேண்டும் என்று அழகிரி கூறுகிறார். ஒரு தந்தையாக இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று கருணாநிதி கூறியுள்ளார்.

“இருந்தாலும் அந்த வார்த்தையை கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டேன். ஆனால் காலை 7 மணிக்கு வீட்டிற்குள் நுழைந்து படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலின் பற்றி தொடர்ந்து பல விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளை பேசி கொதிப்படையச் செய்தார்.”

#TamilSchoolmychoice

“அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து இப்போது வரை திமுக இயக்கம் எத்தனையோ சோதனைகளைக் கடந்து வருகின்றது.என்னுடைய 14வது வயது முதல், இந்த 91வயது வரையில் பல தியாகங்களை செய்து, அடக்குமுறைகளை ஏற்று, பெரியாரும் அண்ணாதுரையும் உருவாக்கி தந்த இந்த இயக்கத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றவன் என்ற முறையில் தமிழ் மக்களுக்கு உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறுவது எனது கடமையாகும்” என்று கருணாநிதி உருக்கமாகக் கூறியுள்ளார்.