Home கலை உலகம் தனுஷ் மற்றும் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘அனேகன்’

தனுஷ் மற்றும் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘அனேகன்’

616
0
SHARE
Ad

danush and karthik

சென்னை, ஜன 28- 2012-ஆம் ஆண்டு வெளியான ‘மாற்றான்’ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ‘அனேகன்’. அனேகன் என்றால் உருவத்தில் ஒன்றானவன், வீரத்தில் பலவானவன் என்று பொருளாம். அதற்கேற்றார்போல் இப்படத்தில் தனுஷ் சென்னையில் வாழும் சேரி பையனாகவும், சுருட்டை முடியுடனும், கராத்தே வீரராகவும் வருகிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் கார்த்திக் வில்லனாக நடிக்கிறாராம். அவரின் வில்லன் கதாபாத்திரம் ‘மங்காத்தா’ படத்தில் அஜீத் நடித்திருப்பது போன்ற வித்தியாசமான முறையில் அமைந்திருக்கும் என கூறப்படுகின்றது.