Home நாடு காஜாங் இடைத்தேர்தலில் தே.மு போட்டியிடும்!

காஜாங் இடைத்தேர்தலில் தே.மு போட்டியிடும்!

570
0
SHARE
Ad

muhyidin.jpg fபுத்ராஜெயா, ஜன 29 – எதிர்வரும் காஜாங் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடும் என்று துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக தாங்கள் காத்திருப்பதாகவும், அதன் பின்பு தேசிய முன்னணியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி வேட்பாளர் யார் என்பது குறித்து தங்களுக்கு கவலை இல்லை என்று குறிப்பிட்ட முகைதீன், காஜாங் தொகுதி மசீசவின் பகுதியாகும் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் அன்வார் காஜாங் சட்டமன்றத்தில் போட்டியிடுவது குறித்து கருத்துரைத்த முகைதீன், “அவரிடம் பெரிய திட்டம் உள்ளதா என்று தெரியாது. அது பற்றி ஆரூடமும் கூறமுடியாது. ஆனால் கடந்த 20 மாதங்களாக சிலாங்கூரில் பாக்காத்தான் தலைவர்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது. காரணம் அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.” என்று குறிப்பிட்டார்.